ஷா ஆலம், 18 ஜனவரி:- மக்கள் பிரதிநிதிகள் சமூகத்துடன் தொடர்பு கொள்வதற்கு, திட்மிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதை மட்டுமே நம்பி இருப்பதை விட, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டும்.
50 வயதான பொதுப்பணியாளர் தாமேந்திரன் கிருஷ்ணன் குட்டி கூறுகையில், குறிப்பாக மக்களின் பிரச்சினைகள் தொடர்பான சமீபத்திய தகவல்களைப் பெறுவதில், சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மிகவும் விரிவாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது.மேலும், தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் எழும் எந்தவொரு பிரச்சினையையும் எளிதில் தீர்க்க உதவும் வகையில் இந்தத் தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
"ஒரு சிலாங்கூர் குடிமகனாக, அரசாங்கம் மண்டலங்களைப் பிரிக்கத் திட்டமிட்டால் அது மிகவும் நல்லது. ஏனெனில் புவியியல் அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான எழும் பிரச்சினைகள் எளிதாகத் தீர்க்கப் படலாம்.
"மறுசீரமைப்பின் மூலம், மக்கள் பிரதிநிதிகள் தீவிர கவனம் செலுத்த முடியும். அவர்களை சந்திப்பது உண்மையில் கடினம் என்றாலும், மக்களின் குரலைக் கேட்க சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தலாம்" என்றார்.28 வயதான பொருட்கள் விநியோகிப்பவர் முகம்மது அக்மால் மோட். யூனுஸ் கூறுகையில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க மறுசீரமைப்புச் செயல்படுத்துவதற்கு நேரம் வந்துவிட்டது.
"நான் மேருவில் வசிக்கிறேன், அனைவருக்கும் தெரியும் இந்த பகுதி அடிக்கடி வெள்ளத்திற்கு உள்ளாகிறது. இந்த வெள்ளத்தின் விளைவாக இழப்புகள் ஏற்படுகின்றன மற்றும் சாலைகள் எளிதில் சேதமடைகின்றன, ஆனால் இதை எதிர்த்துக் குரல் கொடுக்க நீண்ட காலம் ஆகிறது."எனவே, மறுசீரமைப்பின் மூலம், இங்க எழும் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க முடியும். வாக்காளர்கள் அதிகம் இல்லாத இந்தப் பகுதி, மக்கள் பிரதிநிதி தனது பொறுப்புகளை செய்வதில் கவனம் செலுத்த உதவுகிறது என்பதால் அதிக நன்மைகள் உள்ளன" என்றார்.
தொகுதி மறுசீரமைப்பு ஆய்வு கடைசியாக 2018-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது, மேலும் கூட்டரசு அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள எட்டு ஆண்டு கால வரம்பிற்கு உட்பட்டதாகும்.தேர்தல் ஆணையத்தின் (SPR) கூற்றுப்படி, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் நடத்தப்படும் மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு தரவுகளைக் கருத்தில் கொண்டு, அந்தக் காலப்பகுதி முடிந்த பிறகே புதிய ஆய்வைத் தொடங்க முடியும்.
இதனுடன் தொடர்புடையதாக, அடுத்த தொகுதி மறுசீரமைப்பு ஆய்வு சாத்தியம் என்று எதிர் பார்க்கப்படும் நேரத்தில், தேர்தல் ஆணையத்தின் (SPR) மீதான வெளிப்படைத் தன்மை, உள்ளடக்கம் மற்றும் பொது நம்பிக்கை ஆகியவை தொடர்ந்து கவனிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இதற்கு முன்னர், சிலாங்கூர் அம்னோ தலைவர் டத்தோ மெகாட் ஜுல்கர்னைன் ஓமார்தீன், இந்த மாநிலத்தில் உள்ள மலாய் பெரும்பான்மை பகுதிகளின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய தேர்தல் தொகுதி மறுசீரமைப்பு முன் மொழிவுகளுக்கு ஆதரவளிப்பதில்லை என்று உறுதியளித்தார்.
குறிப்பிட்ட தொகுதி மறுசீரமைப்பு செயல்முறை மூலம் மலாய் அல்லாத இடங்களை சேர்க்க விரும்பும் தரப்பினர் உள்ளனர் என்ற கருத்துக்கு அடுத்து இந்தக் கவலை எழுந்தது.தொகுதி மறுசீரமைப்பு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், சிலாங்கூரில் உள்ள அனைத்து 22 நாடாளுமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய முழுமையான வகையில் செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


