கடற்கரையில் காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

18 ஜனவரி 2026, 3:39 AM
கடற்கரையில் காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

கோத்தா திங்கி, ஜனவரி 18- பெங்கெராங், லூபுக் செபாங் கடற்கரைக்கு அருகில் வலது தொடையில் காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது.

காலை சுமார் 10.40 மணியளவில் அந்தப் பகுதியில் பெண் ஒருவர் சடலமாக ஒதுங்கிக் கிடப்பது குறித்து பொதுமக்களிடமிருந்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக கோத்தா திங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரின்டெண்டண்ட் யூசோப் ஒத்மான் தெரிவித்தார்.

"முதற்கட்ட விசாரணையில், அவரது வலது தொடையில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அத்துடன் உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் கூரினார். இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. சடலம் இன்று காலை 9 மணிக்கு பிரேதப் பரிசோதனைக்காக கோத்தா திங்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும்," என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள், புலனாய்வு அதிகாரியை 017-925 2768 என்ற எண்ணிலோ, அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது கோத்தா திங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் நேரடி எண்ணான 07-8831222 தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு யூசோப் கேட்டுக்கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.