பேர்லி-தீனா, ஆரோன்-வூய்யிக் இந்திய ஓப்பன் அரையிறுதியில் களமிறங்குகிறார்கள்**கோலாலம்பூர், ஜனவரி 16 — மலேசியாவின் முதன்மை மகளிர் இரட்டையர் ஜோடியான பேர்லி தான்-தீனா முரளிதரன், இன்று புது டில்லியில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் தைவானின் ஹியேஷ் பெய் ஷான்-ஹங் என் தூ என்ற ஜோடியை வீழ்த்தி, இந்திய ஓப்பன் பூ பந்து போட்டியில் மலேசிய வெற்றிக் கொடியை உயர்த்திப் பிடித்தனர்.உலக தரவரிசையில் இரண்டாம் நிலையில் உள்ள மலேசிய ஜோடி பெய் ஷான்-என் தூ ஜோடியை இந்திரா காந்தி விளையாட்டு மையத்தில் வெறும் 33 நிமிடங்களில் 21-16, 21-10 என்ற புள்ளி கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பேர்லி-தீனா நாளை அரையிறுதியில் ஜப்பானின் யுகி ஃபுகுஷிமா-மாயு மட்சுமோட்டோ என்ற ஜோடியை எதிர்கொள்ளும்.அதேநேரம், தேசிய மகிழ் இரட்டையர் சோடியான ஆரோன் சியா-சோ வூய்யிக், தைவானின் லீ ஜே-ஹுய்-யாங் போ ஹ்சுவான் ஜோடியை 21-19, 21-14 என்ற நேரடி செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.உலக இரண்டாம் தரவரிசையில் உள்ள இந்தச் ஜோடி, அரையிறுதியில் தைவானின் லியூ குவாங் ஹெங்-யாங் போ ஹான் அல்லது ஜப்பானின் ஹிரோக்கி மிடோரிகாவா-கியோஹே யமாஷிதா ஜோடிகளில் ஒருவரை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.கலப்பிரட்டையர் பிரிவில், தேசிய ஜோடியான கோ சூன் ஹுவாட்-ஷெவான் லாய், சீனாவின் முதல் நிலை ஃபெங் யான் ஜே-ஹுவாங் டோங் பிங் ஜோடியிடம், 19-21, 21-19, 18-21 என்ற இறுக்கமான போட்டியில் தோல்வியடைந்தனர்.
பேர்லி-தீனா, ஆரோன்-வூய்யிக் இந்திய ஓப்பன் அரையிறுதியில் களமிறங்குகிறார்கள்
17 ஜனவரி 2026, 5:09 AM



