சிப்பாங், ஜன 16 - KLIA மாவட்டத்தின் புதிய காவல்துறை தலைவராக ரவி முத்துசாமி நியமிக்கப்பட்டார். அவரது நியமனம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதற்கு முன் ஒரு ஆண்டு 9 மாதங்களாக KLIA மாவட்டக் காவல்துறை தலைவராக பணியாற்றி வந்த துணைக் கமிஷனர் அஷ்மான் ஷரியாட்டிற்கு பதிலாக ரவி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், சிலாங்கூர் காவல்துறை தலைவர் டத்தோ ஷஸ்லி மற்றும் KLIA மாவட்டக் காவல் தலைமையகத்தின் காவல்துறையினர் முன்னிலையில் பதவியேற்பு சடங்கு நடைபெற்றது.
KLIA மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறித்த தகவல்களை ஊடகவியலாளர்களுடன் பகிர்ந்துகொள்ளவதில் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக ரவி தெரிவித்தார்.
எந்தவொரு செய்தியையும் வெளியிடுவதற்கு முன் அது குறித்து காவல்துறையிடம் ஊடகவியலாளர்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என அவர் கூறினார்.


