புத்ராஜெயா, ஜன 15 - தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மனிதவள மேம்பாட்டு வரி விலக்கு வழங்கப்படுவதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
கடந்தாண்டு எடுக்கப்பட்ட அரசாங்க முடிவுக்கு இணங்க இந்த நடவடிக்கை ஜனவரி 2026 முதல் டிசம்பர் 2026 வரை அமலில் இருக்கும்.
இந்த வரி விலக்கு பாலர் பள்ளிகள், பள்ளிகள், தொழிற்பயிற்சி மையங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 3,500க்கும் மேற்பட்ட நிறுவனங்களை உள்ள்டக்கியது. இதில் மொத்தமாக RM35 மில்லியன் வரிச் சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-இந்த நடவடிக்கை கல்வித் துறையை வலுப்படுத்தி, எதிர்கால திறமைகளை உருவாக்கவும், தரமான கல்வி தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும் உதவும்" என ரமணன் விளக்கினார்.
இந்த சலுகை தகுதியான கல்வி நிறுவனங்கள் மட்டுமே பெறுவதை உறுதி செய்யப்படும் என HRD Corp தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் சையட் அல்வி முகமட் சுல்தான் தெரிவித்தார்.
முன்னதாக, இந்த தகவல் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமால் கடந்தாண்டு அறிவிக்கப்பட்டிருந்தது.


