பொங்கல் தமிழர்களின் பாரம்பரியத்தின் அடையாளம்

15 ஜனவரி 2026, 12:38 AM
பொங்கல் தமிழர்களின் பாரம்பரியத்தின் அடையாளம்

ஷா ஆலம், ஜன 15 - தமிழர் திருநாளான பொங்கல் கொண்டாடப்படும் தை மாதம் தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாகக் கருதப்படுகிறது தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கேற்ப தை மாதம், சிறப்பான வாழ்க்கை அமைவதற்கான தொடக்கமாக அமைய வேண்டும் என வேண்டி தமிழர்களால் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிக்கை தமிழ் கலாச்சாரத்தை உலகிற்கு உணர்த்தும் விழாவாகக் காணப்படுகின்றது இந்த சிறப்பான திருநாள் பற்றி மலேசிய இந்து சங்கம் தலைவரிடம் மீடியா சிலாங்கூர் பேட்டி கண்டது.

பொங்கல் திருநாள் தமிழர்களின் மிக பழமையான பாரம்பரிய விழாக்களில் ஒன்றாகும். இது வேளாண்மையை அடிப்படையாக கொண்டு கொண்டாடப்படும் ஒரு நாளாகும் என தங்க. கணேசன் கூறினார்.

பொங்கல் என்ற சொல்லின் அர்த்தம் பொங்கி எழுதல் ஆகும். அதாவது செழிப்பு, வளம், மகிழ்ச்சி ஆகியவை நம் வாழ்வில் பொங்கி எழ வேண்டும் என்பதின் அடையாளம் ஆகும்.

சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாள், உழவர்கள் மற்றும் இயற்கையைப் போன்றும் திருநாளாக பொங்கல் கருதப்படுவதோடு தமிழர்களின் ஒற்றுமை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் திருநாளகவும் பொங்கல் அமைந்துள்ளது என்றால் அது மிகையில்லை.

போகி பண்டிக்கை, சூரியப் பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என பொங்கல் திருநாள் தமிழர்கள் நான்கு நாட்களுக்கு சிறப்பாகக் கொண்டாடும் ஒரு வைபவம்.

இந்தியாவில் விவசாயம் சார்ந்து அறுவடை திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல், பல இன மக்களை கொண்ட மலேசியாவில் தமிழர்களின் அடையாளமாக திகழ்கிறது என்றார் அவர்.

தற்போது பல நவீன மாற்றங்கள் பொங்கல் வைக்கும் முறையில் நிகழ்ந்திருந்தாலும் தமிழர்களிடையே பொங்கல் வைக்கும் மரபு இன்னும் அழியவில்லை என தங்க கணேசன் பெருமையாக மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.