ஷா ஆலம், ஜன 13 - எதிர்காலத்தில் பன்றி வளர்ப்பு நடவடிக்கைகளுக்கு சிலாங்கூர் மாநில அரசு நிதி ஒதுக்காது அல்லது எந்த முதலீட்டையும் செய்யாது என சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அறிவித்தார்.
தஞ்சோங் சிப்பாட் பகுதியில் உள்ள பண்ணைகளின் உரிமமும் புதுப்பிக்கப்படாது. அவை படிப்படியாக மூடப்பட்டு புக்கிட் தாகார் பகுதிக்கு மாற்றப்பட வேண்டும் என வெளியிட்ட அறிக்கையில் அவர் உத்தரவிட்டார்.
பொது நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை ஆகியவற்றை முன்னிறுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் மாநிலத்தில் முஸ்லீம் அல்லாத மக்களுக்கான பன்றி இறைச்சி தேவை குறித்தும் ஆய்வு நடத்தப்படும்.
இந்த கணக்கெடுப்பு, புக்கிட் தாகாரில் பன்றி வளர்ப்பு நியாயமானதாகவும் நிர்வகிக்கக் கூடியதாகவும் இருப்பதை உறுதிச் செய்ய, அதன் அளவு, திறன் மற்றும் நோக்கத்தை தீர்மானிப்பதற்கான அடிப்படையாக இருக்கும் என சுல்தான் ஷாராஃபுடின் தெரிவித்தார்.
சனிக்கிழமை (ஜனவரி 10), மலாய்-முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் பெரிய அளவிலான பன்றிப் பண்ணைகளின் வளர்ச்சி குறித்த மேற்கோள் காட்டி, தஞ்சோங் சிப்பாட்டில் பன்றி வளர்ப்பை அனுமதிக்கும் திட்டங்கள் குறித்து சுல்தான் ஷராபுடின் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.


