வாஷிங்டன், ஜன 13 - மத்திய கிழக்கில் உள்ள ஈரான் நாட்டுடன் எந்தெந்த நாடுகள் வர்த்தகத்தை அல்லது வர்த்தக பங்காளியாக உள்ளதோ அந்த நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா கூடுதலாக 25 விழுக்காடு வரி விதிப்பை அறிவிக்கும்
இந்த தகவலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்ற மிகப்பெரிய போராட்டங்களின் விளைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாக அதிபர் டிரம்ப் தெளிவுப்படுத்தினார்.
ஈரான் மீது அமெரிக்கா கடுமையான உளவியல் மற்றும் இராணுவ தாக்குதல்கள் மேற்கொண்டு வருகிறது. ஈரானின் நடப்பு அரசை வீழ்த்த அமெரிக்க கங்கணம் கட்டி வருகிறது.


