தாய்லாந்தின் தெற்கு பகுதிகளில் நடந்த தாக்குதலில் இதுவரை எந்த மலேசியரும் பாதிக்கப்படவில்லை

12 ஜனவரி 2026, 11:13 AM
தாய்லாந்தின் தெற்கு பகுதிகளில் நடந்த தாக்குதலில் இதுவரை எந்த மலேசியரும் பாதிக்கப்படவில்லை

கோலாலம்பூர், ஜன 12 - நேற்று தாய்லாந்தின் தெற்கு பகுதிகளில் நடந்த தாக்குதலில் இதுவரை எந்த மலேசியரும் பாதிக்கப்படவில்லை என்று மலேசிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த தாக்குதல் அதிகாலை யாலா, நாரதிவாட் மற்றும் பட்டாணி மாகாணங்களில் நிகழ்ந்தது என தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகள் வெளியிடும் அனைத்து பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அவசரநிலைகளில் விரைந்து தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை வழங்குவதற்காக, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்கள் தங்களின் இருப்பிட விவரங்களை பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், உதவி தேவைப்படும் மலேசியர்கள், சொங்கலாவில் உள்ள மலேசிய துணைத் தூதரகத்தை தொடர்புக்கொள்ளலாம்.

தற்போது நிலையை மலேசிய வெளிவிவகார அமைச்சு தொடர்ந்து நெருக்கமாகக் கண்காணித்து வருவதாகவும், தேவையான சமயங்களில் புதிய தகவல்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.