கிள்ளான் பள்ளத்தாக்கில் 19 பேருந்து வழித்தடங்களை ‘ஆன்-டிமாண்ட்’ சேவைக்கு மாற்றுகிறது ரேபிட் கேஎல்

12 ஜனவரி 2026, 9:43 AM
கிள்ளான் பள்ளத்தாக்கில் 19 பேருந்து வழித்தடங்களை ‘ஆன்-டிமாண்ட்’ சேவைக்கு மாற்றுகிறது ரேபிட் கேஎல்

கோலாலம்பூர், 12 ஜனவரி: கிள்ளான் பள்ளத்தாக்கில் சிறந்த சேவையை வழங்கும் நோக்கில், ரேபிட் பேருந்து (Rapid Bus Sdn Bhd) நிறுவனம் ஜனவரி 16 முதல் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பேருந்து வழித்தடங்களை மாற்றியமைக்க உள்ளது.

முதல் கட்டமாக 16 எம்ஆர்டி (MRT) இணைப்பு வழித்தடங்கள் மற்றும் மூன்று வழக்கமான ரேபிட் கேஎல் (Rapid KL) வழித்தடங்கள், 'ரேபிட் கேஎல் ஆன்-டிமாண்ட்' (Rapid KL On-Demand) சேவைக்கு முழுமையாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வழித்தடங்களில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"இந்த வழித்தடங்கள், ரேபிட் கேஎல் இயக்கும் மொத்தம் 281 பேருந்து வழித்தடங்களில் ஏழு சதவீதமாகும்," என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. செயல்பாட்டுத் தலைமை நிர்வாக அதிகாரி கு ஜமில் ஜகாரியா விளக்குகையில், 2024-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கப்பட்ட பயணிகளின் பயன்பாட்டு முறைகள் குறித்த விரிவான ஆய்வின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆய்வின் மூலம் பயணிகளின் தேவைக்கேற்ப வழித்தடங்களையும் நேர அட்டவணைகளையும் சீரமைக்க முடிந்துள்ளதாகவும், இது செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார். பயணிகள் தங்களின் பயணங்களை 'ரேபிட் ஆன்-டிமாண்ட்' (Rapid On-Demand) செயலி மூலம் முன்பதிவு செய்து, தடையின்றி சேவையைப் பெற முடியும் என்று அவர் உறுதி அளித்தார்.

இது குறித்து மேல் தகவல்கள் www.myrapid.com.my இணையதளத்திலும் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து பதிவேற்றப்படும்," என்றும் அவர் தெரிவித்தார். கூடுதல் விவரங்களுக்குப் பொதுமக்கள் ரேபிட் கேஎல் உதவி எண்ணான 03-7885 2585-ஐத் தொடர்பு கொள்ளலாம் அல்லது suggest@rapidkl.com.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.