ஷா ஆலம், ஜன 12: ஜனவரி 8 ஆம் தேதி செலாயாங் பகுதியில் வணிக உரிமங்களை ஆய்வு செய்வதற்கும், வணிக வியாபாரிகளைக் கண்காணிப்பதற்கும் நடத்தப்பட்ட நடவடிக்கையில், செலயாங் நகராண்மை கழகம் (MPS) மொத்தம் 49 நோட்டிஸ்களை வழங்கியது.
முகமட் நூர் சலேஹுடின் கமிஸ் தலைமையில், செலாயாங் நகராண்மை கழகத்தின் கீழ் உள்ள பல்வேறு மண்டலங்கள் மற்றும் நிர்வாகப் பிரிவுகள் இந்த நடவடிக்கையில் ஈடுப்பட்டன.
"உரிமத்தின் விதிமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக வணிக வளாகங்கள் மற்றும் வணிகர்கள் மீது சோதனைகள் மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டன," என்று அவர் கூறினார்.
அங்கீகரிக்கப்படாத வணிகம் மற்றும் உரிம நிபந்தனைகளை மீறுதல் உள்ளிட்ட பல குற்றங்கள் சோதனையின் முடிவில் கண்டறியப்பட்டன.
49 நோட்டிஸ்களை வெளியிட்டதோடு விதிமுறைகளை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக மூன்று பறிமுதல்களை செலாயாங் நகராண்மை கழகம் செயல்படுத்தியது.
ஒவ்வொரு வணிக வளாகமும் ஊராட்சி மன்றங்கள் நிர்ணயிக்கப்பட்ட சட்டங்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இத்தகைய நடவடிக்கைகள் அவ்வப்போது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளது விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர் சமூகத்திற்காக ஒழுங்கமைந்த மற்றும் பாதுகாப்பான வணிகச் சூழலை உருவாக்குவதில் தங்களின் உறுதிப்பாட்டை செலாயாங் நகராண்மை கழகம் வலியுறுத்தியுள்ளது.




