பன்றி வளர்ப்பு: விவசாய நிர்வாகக் குழு திங்கள் கிழமை சுல்தானுக்கு விளக்கம் அளிக்கும்

11 ஜனவரி 2026, 8:30 AM
பன்றி வளர்ப்பு: விவசாய நிர்வாகக் குழு திங்கள் கிழமை சுல்தானுக்கு விளக்கம் அளிக்கும்

ஷா ஆலம், ஜன 11 — விவசாய நிர்வாகக் குழு உறுப்பினர் டத்தோ இஸ்ஹாம் ஹாஷிம் நாளை சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜை சந்தித்து, கோல லங்காட்டில் பன்றி வளர்ப்பு செயல்பாடுகள் குறித்து மாநில நிர்வாகக் குழுவின் முடிவை வழங்குவார்.

மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறுகையில், இஸ்ஹாம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மையை மேம்படுத்த அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் விவரிப்பார்.

கழிவு மேலாண்மைக்கு குறிப்பாக கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது வடிகால் அமைப்பில் எதிர்மறை விளைவுகளை தடுக்கும் என்று அவர் கூறினார்.“இந்த முடிவு அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது. தொழில்நுட்ப அமைப்புகளின் கருத்துகளை உள்ளடக்கியது.

இது பல தசாப்தங்களாக நீடித்த பிரச்சினையை தீர்க்கும்.இந்த முன்முயற்சி சமூக உணர்வுகளை மதிக்கும் நோக்கம் கொண்டது. பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வடிக்கால் அமைப்பை பாதுகாப்பதில் முக்கியம். மேலும் காற்று மாசுபாட்டை தடுப்பது.தொழில்துறை எதிர்மறை விளைவுகள் இல்லாமல் பாதுகாப்பாக செயல்படலாம்” என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த முடிவு மாநில நிர்வாகக் குழுவின் உணர்திறன் பிரச்சினையை அறிவுப்பூர்வமாக, விரிவாக மற்றும் பயனுள்ள வகையில் கையாளும் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சியை பிரதிபலிக்கிறது என்று அமிருடின் கூறினார்.

“இது சுற்றுச்சூழல் கவலைகளை தீர்க்கும் அதேநேரம் சமூக தேவைகளை சமநிலைப் படுத்தி, மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட நடுத்தர மற்றும் நீண்ட கால தீர்வு மூலம் கட்டுப் பாடுகளை வலுப்படுத்தும்” என்று அவர் கூறினார். சுல்தான் ஷாராபுடின் அறிவுரை மற்றும் வழிகாட்டலை மாநில அரசு மதிக்கிறது என்றார் அவர்.

முன்னதாக, சுல்தான் ஷாராபுடின் சிலாங்கூர் அரசு தற்காலிகமாக  2030-இல் புக்கிட் தாகாருக்கு இடமாற்றம்  வரும் வரை. இந்த ஆண்டு  தொடங்கி கோல லங்காட் தஞ்சோங் சிப்பாட்டில் பன்றி வளர்ப்பை அனுமதிக்கும் திட்டத்துக்கு  ஏமாற்றத்தையும், உடன் பாடின்மையையும் வெளிப்படுத்தினார்.

இஸ்தானா ஆலம் ஷா வெளியிட்ட அறிக்கையின் படி, அவரது ராயல் ஹைனஸ் இந்த முடிவை கவனமாக ஆராய்ந்ததாகவும். குறிப்பாக ஏற்றுமதி சந்தைக்கு ஏற்ற பெரிய அளவிலான பன்றி வளர்ப்பு வளர்ச்சி சாத்தியம் இருப்பதால். சுமார் 202 ஹெக்டேர் பரப்பை உள்ளடக்கியது.

அறிக்கையின்படி, சிலாங்கூரில் சீனர்கள் மற்றும் பிற முஸ்லிமல்லாத சமூகங்களின் உணவு தேவைகளை பூர்த்தி செய்ய சிறிய அளவிலான மற்றும் நன்றாக கட்டுப்படுத்தப் பட்ட பன்றி வளர்ப்புக்கு சுல்தான் ஷாராபுடின் கொள்கையளவில் ஒப்புக்கொள்கிறார்.

இதற்கிடையில், தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா கூறுகையில், உள்ளூர் குடியிருப்பாளர்களின் புகார்களை கருத்தில் கொண்டு.அந்தப் பகுதியில் பன்றி வளர்ப்பு செயல்பாடுகளின் கண்காணிப்பு தொடர்ந்து நடைபெறும். “நான் வளர்ச்சிகளை தொடர்ந்து கண்காணித்து, சுல்தான் ஷாரஃபுடினின் உத்தரவு மற்றும் ஞானத்துடன் ஒத்துப்போகும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் இருப்பதை உறுதி செய்வேன்.

மக்களின் நலன் மற்றும் மாநில இணக்கத்தை முன்னுரிமை அளித்து” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார் போர்ஹான். சிலாங்கூர் அரசாங்கத்தில் வீட்டுவசதி ஆட்சிக்குழு உறுப்பினராகவும் இருப்பவர், கால்நடை பண்ணைகளில் கழிவு அமைப்பு கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படுவதை சிலாங்கூர் அரசு உறுதி செய்யும் என்றும் கூறினார்.

இது தூய்மை தங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலனை உறுதி செய்வதற்காக. “அவரது ராயல் ஹைனஸின் உறுதியான நிலைப்பாட்டை நான் அடக்கமாக கவனத்தில் கொள்கிறேன். 2030-இல் புக்கிட் தாகார் இடமாற்றத்துக்கு முன்பு கோல லங்காட்டை தற்காலிக கால்நடை வளர்ப்பு இடமாக பயன்படுத்த அனுமதி அளிக்காதது. மாசுபாடு அபாயங்கள், குடியிருப்பாளர்களின் நலன் மற்றும் உள்ளூர் சமூக இயக்கத்தின் தாக்கம் குறித்த கவலைகளை கருத்தில் கொண்டு.”முன்னதாக, இஸ்ஹாம் கூறுகையில், சிலாங்கூர் அரசு சுற்றுச்சூழல் கவலைகளை சிறப்பாக கையாளவும், ஆப்ரிக்கன் ஸ்வைன் ஃபீவர் (ASF) உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்தவும் தஞ்சோங் சிப்பாட்டில் லாடாங் தும்பொக் பகுதியில் மட்டும் பன்றி வளர்ப்பு செயல்பாடுகளை அனுமதிக்கிறது.

இந்த ஆண்டு அமலுக்கு வந்த இந்த முடிவு 112 பண்ணைகளை உள்ளடக்கியது. அனைத்து இயக்குநர்களும் 1961 பன்றி வளர்ப்பு கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் உரிமங்கள் புதுப்பிக்க உத்தரவிடப் பட்டுள்ளனர். தற்போது, சிப்பாங், சுங்கை பெலங்கான் பகுதியில் மூன்று பண்ணைகள் மட்டும் தஞ்சோங் சிப்பாட்டுக்கு வெளியே உள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.