ஈ-ஸ்போர்ட்ஸ் கேம் ஹவுஸ் அமைக்க கார்ல்டன் ஹோட்டல் மிகவும் தகுதியான இடம்

11 ஜனவரி 2026, 2:00 AM
ஈ-ஸ்போர்ட்ஸ் கேம் ஹவுஸ் அமைக்க கார்ல்டன் ஹோட்டல் மிகவும் தகுதியான இடம்
ஷா ஆலாம், ஜனவரி 10 —  இங்கு செக்ஷன் 13-ல் அமைந்துள்ள கார்ல்டன் ஹோட்டல், சிலாங்கூரின் ஈ-ஸ்போர்ட்ஸ் மையமாக உருவாக்க மிகவும் தந்திரமான இடமாக அடையாளங்காண பட்டுள்ள தாயினும், நில உரிமை மற்றும் நில நிலை குறித்த தீர்க்கப்படாத பிரச்சினைகள் காரணமாக கட்டுமானம் இன்னும் தொடங்கப் படவில்லை என்று சிலாங்கூர் மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் செயல் பொறுப்பு ஆட்சிக்குழு  உறுப்பினர் மொஹ்ட் நஜ்வான் ஹலிமி தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட பிறகே மறு வளர்ச்சி பணிகள் தொடங்க முடியும் என்றும் அவர் கூறினார்.“எங்களின் ஆய்வுகளின்படி, இக்கருத்து Menteri Besar Selangor (Incorporated) அல்லது MBI-க்கு உட்பட்டது, ஆனால் நிலம் சம்பந்தமான சில பிரச்சினைகள், நிலம் மற்றும் சுரங்க அலுவலகம் (PTG) மூலம் தீர்க்கப்பட வேண்டும்.

“தற்போது, ஈ-ஸ்போர்ட்ஸ் மையத்திற்காக குறிப்பிட்ட இடம் எதையும் உறுதி செய்யவில்லை; இருப்பினும் கார்ல்டன் ஹோட்டல் தான் மிகவும் தந்திரமான இடம். பயிற்சிக்காக, மால்கள், திறந்த மண்டபங்கள் அல்லது Selangor Red Giants அணியின் தற்போதைய கேம் ஹவுஸ் போன்ற இடங்களை பயன்படுத்தி வருகிறோம்.

“வசதிகள் பார்ப்பதற்கு, தற்போதைய கேம் ஹவுஸ் பயிற்சிக்குத் திருப்திகரமாக உள்ளது. ஆனால் கார்ல்டன் ஹோட்டலைச் சூழ்ந்துள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால், அங்கு ஈ-ஸ்போர்ட்ஸ் மையம் உருவாக்குவதைக் கவனமாக பரிசீலிப்போம்,” என்று அவர் சென்ட்ரல் i-City-யில் நடைபெற்ற Selangor Future Cup போட்டியின் பெட்டாலிங் நிலை சுற்றில் ஊடகங்களை சந்தித்தபோது தெரிவித்தார்.

இதற்கு முன்பு, Menteri Besar டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரியின் பத்திரிகைச் செயலாளர் ஜே ஜே டெனிஸ், கார்ல்டன் ஹோட்டல் பகுதியின் நில உரிமை மாற்றத்தை மாநில அரசு இறுதி செய்து வருவதாகவும், கைவிடப்பட்ட அந்த ஹோட்டல் Sukma 2026க்கான இடமாக ஒருபோதும் திட்டமிடப் படவில்லை என்றும் கூறியிருந்தார்.

“முந்தைய நிறுவனத்திடமிருந்து நிலத்தை பெறும் செயல்முறையை நாங்கள் தற்போது இறுதி கட்டத்துக்கு கொண்டு வந்துள்ளோம், ஆனால் அது எதிர்பார்த்த அளவில் செயல்படவில்லை.

“தற்போதைய கட்டிட அமைப்புடன் பணியாற்றுவது கடினமாக இருப்பதால், ஹோட்டல் இடிக்கப்படும்; பின்னர் முற்றிலும் புதிதாக கட்டப்பட்டு ஈ-ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியமாக செயல்படும் வகையில் மாற்றப்படும்,” என்று அவர் திங்கட்கிழமை ஒளிபரப்பான Media Selangor-ன் Lunch On Us! நிகழ்ச்சியில் கூறினார்.

2024 நவம்பரில், அமிருடின், கார்ல்டன் ஹோட்டலை RM1 மில்லியன் முதலீட்டுடன் ஈ-ஸ்போர்ட்ஸ் மையமாக மாற்றி, சர்வதேச மற்றும் பிராந்திய போட்டிகளை நடத்தும் இலக்குடன் மாநிலம் செயல்படும் என்று அறிவித்திருந்தார்.
அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.