ஷா ஆலம், ஜன 10 — அடுத்த வாரம் உலு லங்காட்டில் நடைபெறவுள்ள ‘’கிளாம்பிங் வித் பிரைட்’’ நிகழ்ச்சி குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது என்று இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் நிர்வாகக் குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹாலிமி தெரிவித்தார்.
மாநில அரசு சமூக மதிப்புகள் மற்றும் உணர்வுகளுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது என்று அவர் கூறினார். “இது குறித்து போலீஸ் மற்றும் சிலாங்கூர் இஸ்லாமிய மதத் துறை (ஜைஸ்) -ஐ தொடர்பு கொண்டுள்ளேன்.
வழிதவறிய கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் எந்தத் தரப்புடனும் மாநிலம் சமரசம் செய்யாது என்றார். சமூகத்தின் ஒழுக்கத்தை பாதுகாப்பது முக்கியம். உள்ளூர் மதிப்புகளுக்கு எதிரான கூறுகளால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்” என்று அவர் இன்று இங்கு சிலாங்கூர் இளைஞர் இயக்க (PeBS) பாராட்டு விழாவில் சந்தித்தபோது தெரிவித்தார்.
‘’கிளாம்பிங் வித் பிரைட்’’ ஏற்பாட்டாளர் பல்வேறு தரப்புகளின் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் அடுத்த வார இறுதியில் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துவதாக தெரிவிக்கப் படுகிறது என்று நஜ்வான் கூறினார்.
இந்த நிகழ்ச்சி ஜெ ஜா கா என்ற LGBT குழுவால் ஏற்பாடு செய்யப்படுகிறது. இது சமூக பின்னடைவு என்று விவரிக்கப் படுகிறது. ஜெ ஜா கா பகிர்ந்த தகவல்களின்படி, இரு நாள் நிகழ்ச்சி நல்வாழ்வு, ராக்கான் செபயா ஆதரவு மற்றும் சுகாதார விழிப்புணர்வை மையமாகக் கொண்டது.
இந்தக் குழு, நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்ட இடத்தில் கேம்பிங்கை உள்ளடக்கியது என்றும், எந்த மலேசிய சட்டத்தையும் மீறவில்லை என்றும் கூறியது. பல்வேறு தரப்புகள் ஜெ ஜாகாவை விசாரிக்கவும், ஒழுக்கமற்ற தாகவும் பாலின கருத்தியலை இயல்பாக்குவதாகவும் கூறப்படும் நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.


