மலேசிய ஓப்பன்: ஆரோன்-வூய் யிக், வெய் சோங்-காய் வுன் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்

9 ஜனவரி 2026, 3:38 AM
மலேசிய ஓப்பன்: ஆரோன்-வூய் யிக், வெய் சோங்-காய் வுன் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்
மலேசிய ஓப்பன்: ஆரோன்-வூய் யிக், வெய் சோங்-காய் வுன் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்

ஷா ஆலம், ஜனவரி 9- நேற்று நடைபெற்ற பூப்பந்து இரண்டாவது சுற்றில் தங்கள் எதிராளிகளை வீழ்த்தி மலேசிய ஓப்பனின் காலிறுதிக்கு இரண்டு தேசிய ஆண்கள் இரட்டையர் அணிகளான ஆரோன் சியா-சோ வூய் யிக் மற்றும் மான் வெய் சோங்-டீ கை வுன் ஆகியோர் முன்னேறினர்.

62 நிமிட ஆட்டத்தில் ஆரோன்-வூய் யிக் சீன ஜோடியான சென் சூ ஜுன்-லியு யாங்கை 21-14, 14-21, 21-14 என்ற புள்ளி கணக்கில் தோற் கடித்தனர். போட்டியின் இரண்டாம் நிலை ஜோடி நாளை காலிறுதியில் தென் கொரியாவின் காங் மின் ஹியூக்-கி டோங் ஜூ அல்லது இந்தோனேசியாவின் சபர் கார்யமன் குட்டாமா-மோ ரெசா பஹ்லேவி இஸ்பஹானியை எதிர்கொள்ள உள்ளது.

இதற்கிடையில், மான் வெய் சோங்-டீ கை வுன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் ஜப்பானிய ஜோடியான ஹிரோகி மிடோரிகாவா-கியோஹெய் யமாஷிதாவை 21-9, 21-15 என்ற கணக்கில் எளிதாக தோற்கடித்தனர். உலகத் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள இந்த ஜோடி, வெறும் 29 நிமிடங்களில் போட்டியை முடித்ததுடன், ஜப்பான் இணைக்கு எதிரான மூன்று சந்திப்புகளில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.