கோலாலம்பூர், ஜன 8 - இன்று அக்ஸியதா அரங்கில் நடைபெற்ற மலேசிய பொது பூப்பந்து போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில், நாட்டின் முதல் நிலை மகளிர் இரட்டையரான பெர்லி தான் - எம் தினா தோல்வியை தழுவினர்.
இந்த ஆட்டத்தில் அவர்கள் இந்தோனேசியாவின் ஃபெப்ரியானா த்விபூஜி குசுமா - மெலிசா ட்ரயாஸ் புஸ்பிதாசாரி ஜோடியுடன் களமிறங்கினர்.
மேலும், 54 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த ஆட்டத்தில், 24-26, 17-21 என்ற நேரடி செட்களில் அவர்கள் தோல்வி கண்டனர். இதன் மூலம் கிண்ணத்தை வெல்லும் பயணத்திற்கு அவர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர்.


