சிப்பாங், ஜன 8 — சீனப் புத்தாண்டு மற்றும் ஹரி ராயா ஐடில்ஃபித்ரி பண்டிகைகளை முன்னிட்டு, கோலாலம்பூரிலிருந்து சரவாக்கிற்கு RM328க்கும், சபாவிற்கு RM398 க்கும் நிலையான டிக்கெட் கட்டண திட்டத்தை ஏர் ஆசியா வழங்குகிறது என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று அறிவித்தார்.
இந்த முயற்சி மலேசியர்கள் மலிவு விலை விமானங்கள் மூலம் வீடு திரும்புவதை உறுதி செய்கிறது. இதனால் பண்டிகைக் காலத்தில் விமான பயணம் எளிதாகக் கிடைக்கும்.
"குறிப்பாக கோலாலம்பூர், சபா மற்றும் சரவாக் இடையே பயணிப்பவர்களுக்கு, நிலையான கட்டணங்கள் போன்ற திட்டங்கள் மூலம் பண்டிகை பயண தேவையை நிர்வகிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிக்கும் ஏர் ஆசியாவின் தொடர்ச்சியான பங்கினால் நான் மகிழ்ச்சியடைகிறேன்,`` என்றார்.
சீனப் புத்தாண்டு மற்றும் ஹரி ராயாவை முன்னிட்டு இந்த நிலையான கட்டண முயற்சி 1,578 விமானங்களை இயக்கும் மற்றும் 31,000க்கும் மேற்பட்ட இருக்கைகளை வழங்கும்.
சீனப் புத்தாண்டு பயணத்திற்கான முன்பதிவுகள் இன்று தொடங்கி பிப்ரவரி 24 வரை நடைபெறும். அதே நேரத்தில் ஹரி ராயா முன்பதிவுகள் மார்ச் 18 முதல் மார்ச் 26 வரை திறந்திருக்கும்.


