டான்ஸ்ரீ ஆர். நடராஜாவின் வழக்கை சந்திக்க நாம் தயார்; சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு சவால்

8 ஜனவரி 2026, 9:05 AM
டான்ஸ்ரீ ஆர். நடராஜாவின் வழக்கை சந்திக்க நாம் தயார்; சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு சவால்

ஷா ஆலம், ஜன 8- கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர் நடராஜாவும் தேவஸ்தானமும் தொடுக்கும் வழக்கை சந்திக்க தயார் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு இன்று சவால் விடுத்தார்.

நான் எந்த ஒரு அவதூறு பரப்பவில்லை. மேலும்  மன்னிப்பு கேட்கும்  பேச்சுக்கே இடமில்லை என்றார். 

எனது வழக்கறிஞர்கள் சட்ட ரீதியாக வழக்கை எதிர்கொள்வார்கள் . ஆகவே அவரும் தேவஸ்தானமும் தொடுக்கும் வழக்கை சந்திக்க தயார் என்று அவர் சொன்னார்.

பத்துமலைத் திருத்தலத்தில் மின் படிக்கட்டு திட்டத்திற்கு சிலாங்கூர் மாநில அரசு அனுமதி வழங்கவில்லை என்று இதற்கு முன்னர் டான்ஸ்ரீ நடராஜா நிருபர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு, பத்துமலைத் திருத்தலத்தில் மின் படிக்கட்டு திட்டத்திற்கு தனிநபர் பெயரில் விண்ணப்பம் செய்ததால் அனுமதி கிடைக்கவில்லை என்று விளக்கம் அளித்தார்.

மேலும் இந்த மின் படிக்கட்டு விவகாரம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, இன்று தனது ஆட்சிக் குழு உறுப்பினர் அலுவலகத்தில் இரண்டு தமிழ்ப் பள்ளிகளுக்கு நிலப்பட்டா வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.