ஷா ஆலம், ஜன 7: நேற்று கிள்ளானில் உள்ள ஜாலான் இஸ்கண்டார், புக்கிட் காப்பாரில், KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) நிறுவனத்திற்கு சொந்தமான கொம்பாக்தோர் லாரி ஒன்று பெரிய வடிகாலில் விழுந்தது. பின்னர், லாரி பழுதுபார்ப்பு பணிக்காக பட்டறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சாலைப் போக்குவரத்துத் துறையின் (JPJ) சோதனையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்த போது ஏற்படவில்லை என KDEBWM ஊடக மற்றும் மக்கள் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.
அந்த லாரி செலாயாங் பகுதியில் இயங்கி வந்தது. அதன் சேகரிப்பு பணியை முடித்துவிட்டு திடக்கழிவு அகற்றும் இடத்திற்குச் சென்று கொண்டிருந்தது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
"லாரி வடிகாலில் விழுவதற்கு முன்பு கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படுகிறது என ஆரம்பகட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் ஏற்பட்டதற்கு சுற்றுச்சூழல் மற்றும் சாலை நிலைமைகள் காரணம் ஆகும் என விசாரணைகள் மூலம் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.
"ஒரு தோவிங் சேவை உதவியுடன் லாரி வெற்றிகரமாக மீட்கப் பட்டு, இப்போது KDEBWM குழுவிற்கு அனுப்பப்பட்டது," என்று அவர் கூறினார்.
செயல்பாட்டு பாதுகாப்பு அம்சங்கள், நிலையான இயக்க நடைமுறைகளுக்கு (SOPs) இணங்குதல் மற்றும் ஓட்டுநர் நலன் ஆகியவற்றில் எப்போதும் கவனம் செலுத்தப்படுவதாகவும் KDEBWM தெரிவித்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் போது தவறாக வழிநடத்தும் எந்த ஊகங்களையும் பொதுமக்கள் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


