ஷா ஆலாம், ஜன 7- பத்துமலை மின் படிக்கட்டு திட்டத்திற்கு அனுமதி மறுப்பது ஏன் என்ற காரணம் ஆலய நிர்வாகத்திற்கு தெரியும். சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் இதனை கூறினார்.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் பத்துமலை மேல்குகைக்கு செல்ல மின் படிக்கட்டு அமைக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கவில்ல என்ற விவகாரம் தற்போது சர்ச்சையாகி உள்ளது.
இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணமே இத்திட்டத்திற்கான அனுமதி விண்ணப்பம் தனிநபரின் பெயரில் உள்ளதாகும். இதனால் இத்திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
அது ஓர் அமைப்பு அல்லது ஓர் இயக்கத்தின் பெயரில் அனுமதி கேட்டிருந்தால் உடனடியாக கிடைத்திருக்கும். இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை செலாயாங் நகாரண்மை கழகத்தினர் மேற்கொள்ள நாங்கள் ஆணையிட்டிருப்போம் என்று அவர் சொன்னார். இவ்விவகாரம் ஆலய நிர்வாகத்திற்கும் தெரியும் என்று பாப்பா ராய்டு கூறினார்.
முன்னதாக, மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் செய்தியாளர்களைச் சந்தித்து இந்த தகவலைத் தெரிவித்தார். பத்துமலை மின் படிக்கட்டு விவகாரம் சமூக ஊடகங்களில் பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது.


