ஷா ஆலம், ஜன 7: நேற்று செத்தியூ, கம்போங் பஞ்சோர் மேராவில் ஆண் சூரியக் கரடி ஒன்றை வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் பாதுகாப்புத் துறை (பெர்ஹிலிதான்) வெற்றிகரமாகப் பிடித்தது.
டிசம்பர் 28 அன்று இந்த கரடி குறித்து குடியிருப்பாளர்களிடமிருந்து புகார் வந்ததைத் தொடர்ந்து, தனது துறை உடனடி நடவடிக்கை எடுத்ததாக திரங்கானு பெர்ஹிலிதான் இயக்குநர் லூ கீன் சியோங் தெரிவித்ததாக ஹரியான் மெட்ரோ தெரிவித்துள்ளது.
பெசுட் மாவட்டப் பெர்ஹிலிதான் குழு உடனடியாக கரடியைப் பிடிக்க பொறி அமைக்கும் நடவடிக்கை எடுத்தது. அந்த பொறிக்குள் அதிகாலையில் கரடி சிக்கியிருக்காலம் என நம்பப்படுவதாக லூ கீன் கூறினார்.
"கரடி நல்ல நிலையில் உள்ளது" என்று அவரை தொடர்பு கொண்டபோது தெரிவித்தார். கரடி அதன் வாழ்விடத்தில் திரும்ப விடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த ஆண்டு இறுதி முதல் கரடி இருப்பதை உணர்ந்ததாக கிராமவாசியான அட்லி அப்துல் ரஹ்மான் (66) கூறினார்.
"கரடி இறுதியாகப் பிடிக்கப்பட்டதில் நாங்கள் நிம்மதியடைகிறோம்," என்று அவர் தெரிவித்தார்.


