ஷா ஆலம், ஜ 6: வெளிப்படை தன்மையற்ற நிலை அல்லது உள்முகப் பண்பு (introvert) என்பது ஊழியர் ஒருவர் பணியிடத்தில் செயலற்ற வராக அல்லது சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாமல் இருப்பதற்கு சரியான காரணமாக அமையாது, மாறாக, சரியான அணுகுமுறை மற்றும் ஆதரவின் மூலம் வலுப்படுத்தக்கூடிய ஒரு ஆளுமை பண்பாகும்.
இந்த பண்பு குழந்தைப் பருவத்திலிருந்தே இயற்கையாகவோ அல்லது அதிர்ச்சியின் விளைவுகளிலிருந்து மற்றும் சில வாழ்க்கை அனுபவங்களிலிருந்து உருவாகலாம் என சிலாங்கூர் மன ஆலோசனை மைய ஆலோசகர் ஜுமாஸ்னி ராஜிகின் கூறினார்.
உள்முக பண்பு கொண்ட ஊழியர்கள் உண்மையில் பணியிடத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றி கொள்ள முடியும், ஆனால் இந்த செயல்முறைக்கு நேரம், ஆதரவு மற்றும் ஒரு சாதகமான சூழ்நிலை தேவை என்றும் அவர் விளக்கினார்.
" இத்தகைய ஊழியர்களுக்கு முன்னேறவும், புதிய பணிகளை முயற்சிக்கவும், அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவும் முதலாளிகள் வாய்ப்பளிக்க வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், மிகவும் செயலற்ற வர்களாகவும் தனிமைப்படுத்தப்பட்ட வர்களாகவும் இருக்கும் உள்முக பண்பு கொண்ட நபர்கள், உதவியை நாடாவிட்டால் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற மனநல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளனர்.
"மனச்சோர்வின் ஆரம்ப அறிகுறிகளில் ஆர்வமின்மை உற்சாகம் குறைதல், ஒதுங்கி இருத்தல் மற்றும் வேலை செயல்திறன் குறைதல் ஆகியவை அடங்கும், மேலும் இந்த சூழ்நிலையை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது," என்று அவர் குறிப்பிட்டார்.
ஒருவர் சிகிச்சை அல்லது ஆலோசனை சேவைகளை நாடுவதற்கு முன் சுய விழிப்புணர்வு கொண்டிருத்தல் முதல் படியாகும்.
“உதவியை கட்டாயப்படுத்த முடியாது, ஏனெனில் தனிநபர் உதவி பெற தயாராக இருக்கும்போது, அவர்களின் நிலைமையை மேம்படுத்த விரும்பும் போதும் மட்டுமே மாற்றம் நிகழும்,” என்று அவர் விளக்கினார். வெளிப்படைத்தன்மையற்ற பண்பு (introvert) பணியிடத்தில் ஒரு தடை இல்லை, சரியான ஆதரவுடன் வெற்றியடைய முடியும்.


