கைவிடப்பட்ட கிறிஸ்டல் அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமானம் டிசம்பரில் மீண்டும் தொடங்கியது

6 ஜனவரி 2026, 7:07 AM
கைவிடப்பட்ட கிறிஸ்டல் அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமானம் டிசம்பரில் மீண்டும் தொடங்கியது

ஷா ஆலம், ஜன 5: 20 ஆண்டுகளுக்கும் மேலாக கைவிடப்பட்ட, தாமான் செலாயாங் முதியாராவில் உள்ள கிறிஸ்டல் அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமானம் இறுதியாக கடந்த டிசம்பரில் மீண்டும் தொடங்கியது.

இந்த முயற்சி 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கியதாக மகளிர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் சாரி கூறினார். இதில் வீட்டுவசதி மற்றும் உள்ளூர் அரசாங்க அமைச்சகமும் (KPKT) அடங்கும்.

சம்பந்தப்பட்ட டெவலப்பர் வணிகத்திலிருந்து வெளியேறிய பிறகு கிறிஸ்டல் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுவசதி திட்டம் கைவிடப்பட்டது என்று தாமான் டெம்ப்ளர் மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆன அவர் விளக்கினார்.

"2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வீட்டு உரிமையாளர்கள் இது குறித்து புகார் அளித்தபோது நான் ஒரு பணிக்குழுவை உருவாக்கினேன். ஆனால், அச்சமயம் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.

"சில வீட்டு உரிமையாளர்கள் காலமானார்கள். அவர்கள் வங்கி தவணைகளை செலுத்திவிட்டனர், ஆனால் வீட்டில் வசிக்க முடியாமல் போனதால நாங்கள் அனுதாபப்படுகிறோம்," என்று மீடியா சிலாங்கூர் தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

தற்போது சிலாங்கூர் வீட்டுவசதி மற்றும் சொத்து வாரியத்திற்கு (LPHS), KPKT RM45 மில்லியன் நிதியை செலுத்தியுள்ளது மற்றும் அதற்கான ஒப்புதல் கடிதம் (SST) டெவலப்பரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என அன்பால் மேலும் கூறினார்.

எட்டு கட்டுமானத் தொகுதிகளை உள்ளடக்கிய 500 அலகுகளைக் கொண்ட கிறிஸ்டல் அடுக்குமாடி குடியிருப்பு, அடுத்த 18 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

“இந்த வழக்கு மிக நீண்ட காலமாக எடுக்கப்பட்ட வழக்குகளில் ஒன்றாகும். எனவே அதைத் தீர்க்க உதவ நான் உறுதிபூண்டுள்ளேன்.

கிறிஸ்டல் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் பிப்ரவரி 18, 2013 அன்று KPKTஆல் கைவிடப்பட்ட தனியார் வீட்டுவசதித் திட்டமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.