கோலாலம்பூர், ஜனவரி 6 – ஜெனரல் டத்தோ அஸ்ஹான் எம்டி ஓத்மான், மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் ஒப்புதலுடன், ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில், 31வது தரைப்படைத் தளபதியாக (PTD) அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் 631வது ஆயுதப்படை மன்றத்தின் முடிவுக்கு இணங்க அமைந்துள்ளது. அதற்கான பதவி உயர்வு விழா இன்று கோலாலம்பூரில் உள்ள தற்காப்பு அமைச்சகக் கட்டிடத்தில் நடைபெற்றது.
இந்த விழாவை தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ காலீட் நோர்டின் நடத்தி வைத்தார். மலேசிய தரைப்படையின் மக்கள் தொடர்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரது அனுபவமும் தலைமைத்துவமும் நாட்டின் தற்காப்பு மையமாக தரைப்படையின் தயார்நிலையை வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31வது தரைப்படைத் தளபதியாக, ஜெனரல் டத்தோ அஸ்ஹான், வழங்கப்பட்ட நம்பிக்கைக்காக மாமன்னர் மற்றும் மலேசிய அரசாங்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், தரைப்படை வீரர்கள் தொடர்ந்து ஒற்றுமையாகவும், படையின் தொழில்முறைத் தன்மையைப் பேணவும் வலியுறுத்தினார்.


