பூச்சோங், ஜன 6- பூச்சோங்கில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பொழுதுபோக்கு மையத்தில் சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தினர் அதிரடி சோதனைகளை நடத்தினர்.
பூச்சோங் பண்டார் புத்ரியில் உள்ள இந்த பொழுதுபோக்கு மையம் உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உரிமம் மற்றும் தற்போதுள்ள விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்யும் வகையில், சட்ட விதிகளுக்கு இணங்க அந்த வளாகத்தில் இருந்த தொடர்புடைய சில பொருட்களையும் MBSJ பறிமுதல் செய்தது.
"இந்தச் சோதனையில், MBSJ-இன் அனுமதியின்றி பொழுதுபோக்கு நடவடிக்கைகளை நடத்தி வந்ததாகக் கண்டறியப்பட்ட வளாகங்கள் மீது ஆய்வு மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
"தொடர்புடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன, மேலும் வளாகம் உடனடியாக மூடப்பட்டது," என்று MBSJ தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தது.
சட்ட அமலாக்கத்தை உறுதி செய்வதோடு, சமூகத்தின் அமைதி மற்றும் நலனைப் பாதுகாக்கும் வகையில் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அந்த உள்ளூராட்சி மன்றம் தெரிவித்தது.
MBSJ விதிமுறைகளை மீறும் நடவடிக்கைகள் தொடர்பான எந்தவொரு புகாரையும் பொதுமக்கள் MBSJ-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாகவோ அல்லது 019-220 7823 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் MBSJ அமலாக்கத் துறையைத் தொடர்பு கொண்டோ தெரிவிக்கலாம் என்றும் ஊக்குவிக்கப்பட்டது.


