செலாயாங் ஜன 5- தமிழ் கடவுள் திருமுருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் தைப்பூசம் மது இல்லாத தைப்பூசமாக விளங்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு கேட்டுக் கொண்டார்.
தைப்பூசத்தை முன்னிட்டு மதுபான விற்பனைக்கு அனுமதி இல்லை.குறிப்பாக பத்துமலை தைப்பூசத்தில் மது விற்பனைக்கு அனுமதி இல்லை.
செலாயாங் நகராண்மைக் கழக அதிகாரிகள் மது விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் என்று அவர் சொன்னார்.
தைப்பூசத்தை முன்னிட்டு குறிப்பிட்ட தினங்களில் பத்துமலை திருத்தலத்தில் அருகில் உள்ள கடைகளில் மது விற்பனைக்கு அனுமதி இல்லை.
இதை நகராண்மைக் கழக அதிகாரிகள் கண்காணிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக களம் இறங்குவார்கள் என்று அவர் சொன்னார்.
பத்துமலை தைப்பூசத்தை முன்னிட்டு இன்று செலாயாங் நகராண்மைக் கழகத் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடையே நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


