ஷா ஆலாம், ஜன 5- 2026ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில இந்தியர் தொழில்முனைவோர், உபகரண உதவித் திட்டத்தின் பதிவு எதிர்வரும் ஜனவரி 15ஆம் தேதி தொடங்கும் என்று சிலாங்கூர் மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் கூறினார்.
கடந்த ஆண்டு ஒன்பது மாவட்டங்களிலும் சீராக நடைபெற்றதைப் போலவே, 2026ஆம் ஆண்டுக்கான பதிவும் கடந்த ஆண்டைப் போலவே அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள இந்திய சமூகத் தலைவர்கள் (KKI) மூலம் மேற்கொள்ளப்படும்.
இது உதவிகள் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் பயனுள்ள முறையில் சென்றடைவதை உறுதி செய்வதற்காகும். இத்திட்டத்தின் மூலம் சமூகம் பயனடைவதற்காக மாநில அரசாங்கத்தால் RM1 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
சிலாங்கூர் மாநிலத்தில் இந்தியர்கள் தங்களின் வர்த்தக வியாபாரத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த ஐ-சிட் உதவி திட்டம் மாநில அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.



