கோலாலம்பூர், ஜன 5- பிரதமர் பதவிக்காலத்தை ஒருவர் 10 வருடம் வரை மட்டுமே வகிக்க வகை செய்யும் சட்ட முன்வைரவு ஒன்று எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மேலும், துணை அரசு வழக்கறிஞர், தேசிய சட்டத்துறை தலைவர் ஆகியோரின் அதிகாரங்கள் சுயேட்சையாக செய்ய வழிவகுக்கும் மற்றொரு சட்ட முன்வைரவும் நாடாளுமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்று தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
கழக சீர்த்திருத்தத்தை சீரமைக்கும் நடவடிக்கையாக இந்த பிரதமர் பதவிக் காலத்தை 10 ஆண்டுக்குக் கொண்டு வர அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அன்வார் இப்ராஹிம் தெளிவுப்படுத்தினார்.
முன்னதாக, கடந்தாண்டு மார்ச் மாதம் பிரதமரின் பதவிக்காலம் கட்டுப்படுத்தப்படும் என்று பிரதமர் அன்வார் அறிவித்திருந்தார். இதுவே ரிஃபோர்மாசியின் ஓர் அங்கமாகும் என்று கூறியிருந்தார்.
பிரதமர் பதவிக்காலத்தை 10 வருடங்களாக மாற்றும் தீர்மானம் என்பது கடந்த 15ஆவது பொதுத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணியின் பிரதான வாக்குறுதியாகும்.


