ஷா ஆலாம், டிச 31- புத்தாண்டு பிறக்கும் இவ்வேளையில், சிலாங்கூர் மக்கள் தொடர்ந்து அவர்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் வழங்கியமைக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சிலாங்கூர் மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பா ராய்டு வீரமான் கூறினார்.
"2026 ஆம் ஆண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புதிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வெற்றியையும் கொண்டு வரட்டும்'' என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் ஒருவருக்கொருவர் அக்கறை என்ற உணர்வுடன் நாம் அனைவரும் இணைந்து முன்னேறுவோம்.
தொடர்ச்சியான முயற்சி மற்றும் வலுவான ஒத்துழைப்பு மூலம், சிலாங்கூர் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் ஒரு வளர்ந்த, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளமான மாநிலமாக தொடர்ந்து முன்னேறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று தனது முகநூல் பதிவில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.


