கோலாலம்பூர், டிச 31- கடந்த 2014ஆம் ஆண்டு காணாமல்போன மலேசிய விமானமான எம்.எச்.370 விமானத்தைத் தேடும் நடவடிக்கைக்கு மலேசிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த தேடுதல் நடவடிக்கையை OCEAN INFINITY நிறுவனம் மேற்கொள்ளவுள்ளதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
கொள்கையளவில் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள வேளையில் எம்.எச்.370 விமானத்தைத் தேடும் கடப்பாட்டினை மலேசிய அரசாங்கம் கொண்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சு விவரித்தது.
ஒருவேளை எம்.எச்.370 விமானம் கண்டுப்பிடிக்கப்பட்டால் அந்நிறுவனம் வெறும் 283.3 மில்லியன் ரிங்கிட் தொகையைப் பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய தேடுதல் நடவடிக்கையானது 55 நாட்கள் மேற்கொள்ளப்படும் வேளையில் சுமார் 5800 மைல் தூரம் வரை இந்து மகா சமுத்திரத்தில் தேடுதல் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


