சிப்பாங், டிச 31 - ஜனவரி 1 முதல் கே.எல்.ஐ.ஏ டெர்மினல் 1 முனையத்தில் அனைத்துலகப் பயணிகளுக்கான சுங்கப் பரிசோதனைகள் புறப்பாடு வாயில்களில் ஒருங்கிணைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போது பயணிகள் குடிநுழைவுப் பரிசோதனைகளுக்குப் பிறகுதான் சுங்க பரிசோதனைகளுக்குப் உட்பட வேண்டியிருக்கிறது. இதன் காரணமாக உச்ச நேரங்களில் நெரிசல் ஏற்பட்டு பயணிகள் காத்திருக்கும் நேரமும் அதிகமாகி அசௌகரியத்தைத் தருகிறது.
அதனால், இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கை மூலம், பயணிகள் விரைந்து சோதனைச் செய்யப்படுவதால், புறப்பாடு இடத்தில் உள்ள கூட்டமும் காத்திருக்கும் நேரமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோதனைகள் ஒருங்கிணைக்கப்படுவதால், பாதுகாப்பு அம்சங்களுக்கு எந்த குறைப்பாடும் ஏற்படாது என அமைச்சு உத்தரவாதம் அளித்தது. மேலும், சுங்க விதிகளை கடைபிடிக்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.


