ஜோகூர் பாரு, டிச 31- ஜோகூர், இஸ்தானா பாசிர் பெலாங்கியில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு காலை வேளையில் நடைபெற்றதுடன், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
நாட்டின் தற்போதைய நிலவரங்கள் குறித்து மாமன்னருக்குத் தெரிவித்த பிரதமர், நிர்வாக விவகாரங்கள் மற்றும் மக்களின் நலன் தொடர்பான விடயங்களையும் சமர்ப்பித்தார்.
மாமன்னரும் அவரது குடும்பத்தினரும் எப்போதும் உடல்நலத்துடனும், சேமமாக இருக்க வேண்டும் என்றும், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் அன்வார் பிரார்த்தித்தார்.


