பெட்டாலிங் ஜெயா, டிச 31- மலேசிய சூப்பர் லீக் கிண்ண ஆட்டத்தில் சிலாங்கூர் எஃப் சி அணி மலாக்கா எஃப் சி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து லீக்கில் சிலாங்கூர் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது
சிலாங்கூர் எஃப் சி அணிக்கான வெற்றிக் கோல்களை அல்வின் போர்தெஸ், முஹம்மட் ஃபைசால் ஹலிம் மற்றும் ரவாப்டே ஆகியோர் கோல்களைப் புகுத்தினர்.
சிலாங்கூர் எஃப் சி அணி 25 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில் கோலாலம்பூர் சிட்டி எஃப் சி அணி 25 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒரே புள்ளி என்றாலும் கோல் வித்தியாசம் காரணமாக சிலாங்கூர் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது
சிலாங்கூர் எஃப் சி அணி எதிர்வரும் ஜனவரி 4ஆம் தேதி ஜொகூர் டாருல் தக்சிம் அணியை MBPJ அரங்கில் சந்தித்து விளையாடவுள்ளது.


