லண்டன், டிச 31- இங்கிலீஷ் பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லும் வேட்கையில் அர்சனல் அணி களமிறங்கியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அர்சனல் அணி, அஸ்டன் வில்லா அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
அர்சனல் அணிக்கான வெற்றிக் கோல்களை கேப்ரியல், மார்டின் ஒடெகார்ட், சுபிமெண்டி ஆகியோர் புகுத்தினர்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து அர்சனல் தனது பிரிமியர் லீக் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைத் தக்க வைத்து கொண்டுள்ளன.
அஸ்டன் வில்லா ஆறு புள்ளிகள் பின் தங்கி மூன்றாவது இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள மென்செஸ்டர் சிட்டி அணி நாளை அதிகாலையில் சண்டர்லென் அணியுடன் மோதுகிறது.


