கோலாலம்பூர், டிச 30 - எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஒற்றுமை அரசாங்கத்தின் ஒருமைப்பாடு வலுவாக இருப்பதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கு இடையிலான ஒருமித்த கருத்து, எந்தவொரு துரோகமும் இல்லாமல் வெற்றிகரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் விளக்கினார்.
"ஒற்றுமை அரசாங்கத்தின் ஒருமித்த கருத்து வலுவானது, மிகவும் நேர்மையானது மற்றும் நாசவேலை அல்லது துரோக முயற்சிகள் எதுவும் இல்லை," என்று பிரதமர் குறிப்பிட்டதாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் தலைமையிலான பெர்லிஸ் அரசாங்கத்தை உள்ளடக்கிய அரசியல் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கக் கேட்டபோது பிரதமர் அலுவலகத்தில் அன்வார் இவ்வாறு கூறினார்.


