ஜனவரி 1 முதல் ``Ekspres Selatan`` ரயில் சேவை நிறுத்தப்படும்

30 டிசம்பர் 2025, 9:03 AM
ஜனவரி 1 முதல் ``Ekspres Selatan`` ரயில் சேவை நிறுத்தப்படும்

கோலாலம்பூர், டிச 30 - எதிர்வரும் ஜனவரி 1 முதல் KTMB நிறுவனம் இயக்கி வந்த ``Ekspres Selatan`` ரயில் சேவை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்த ரயில் சேவை கிமாஸ், ஜொகூர் பாரு சென்ட்ரல் மற்றும் கிமாஸ் வழித்தடத்தில் இயங்கி வந்ததது குறிப்பிடத்தக்கது.

கிமாஸ் ஜோகூர் பாரு மின்சார இரட்டை ரயில் பாதை திட்டம் முன்னேற்றம் அடைந்துள்ளதால், ரயில் சேவைகளை மேலும் சிறப்பாகவும் வேகமாகவும் மாற்றும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக KTMB தெரிவித்துள்ளது.

ஜனவரி 1 முதல் கிமாஸ் - ஜொகூர் பாரு சென்ட்ரல் இடையே தினமும் எட்டு மின்சார ரயில் சேவைகள் (ETS) முழுமையாக இயக்கப்படவுள்ளதால் பயணிகள் கவலைப்பட தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.

புதிய ரயில் நேர அட்டவணைகளை KTMBஇன் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பயணிகள் தெரிந்து கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.