துங்கு லக்சாமானா அப்துல் ஜாலில் பள்ளிவாசல் கட்டுமானம் குறித்த அண்மைய நிலவரங்களை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கேட்டறிந்தார்

30 டிசம்பர் 2025, 8:41 AM
துங்கு லக்சாமானா அப்துல் ஜாலில் பள்ளிவாசல் கட்டுமானம் குறித்த அண்மைய நிலவரங்களை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கேட்டறிந்தார்

கோலாலம்பூர், டிச 30- ஜொகூர் பாருவில் உள்ள இஸ்தானா செரெனெ அருகே நிர்மாணிக்கப்பட்டு வரும் துங்கு லக்சாமானா அப்துல் ஜாலில் பள்ளிவாசல் குறித்த அறிக்கைகளையும் அதன் கட்டுமான விபரங்களையும் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் கேட்டறிந்தார்.

2015ஆம் ஆண்டு காலஞ்சென்ற பேரரசரின் மகன் துங்கு லக்சாமானா ஜொகூர், அல்மர்ஹும் துங்கு அப்துல் ஜாலில் சுல்தான் இப்ராஹிம் விட்டுச்சென்ற நிதியைக் கொண்டு இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டு வருகிறது.

ஒரு நேரத்தில் சுமார் ஆயிரம் பேர் அங்கு தொழுகையை மேற்கொள்ள ஏதுவாக இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டு வருவதாக சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இந்த கட்டுமானம் குறித்து அறிந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஜொகூர் மாநில இஸ்லாமிய சமய விவகார செயல்முறை அதிகாரி முஹம்மட் ரட்சி முஹம்மட் அமின், ஜொகூர் மாநில இஸ்லாமிய துறை அதிகாரிகள், ஜொகூர் மாநில பொதுப்பணி துறையின் இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.