கோலாலம்பூர், டிச 30- உலகளாவிய பதற்றம் மற்றும் நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில் 2025 ஆம் ஆண்டுக்கான ஆசியான் தலைமைப் பொறுப்பை மலேசியா ஏற்றுக்கொண்டது.
ஆசியான் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கிய தூண்களாக ஒற்றுமை, உரையாடல் மற்றும் பரஸ்பர மரியாதையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகையில், 46வது மற்றும் 47வது ஆசியான் உச்சி மாநாடுகள் உறுப்பு நாடுகளின் கருத்துக்களை ஒன்றிணைப்பதற்கும், பிராந்தியத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்வதில் உள்ள புரிதல் இடைவெளிகளைக் குறைப்பதற்கும் ஒரு முக்கிய தளமாக அமைந்தன.
"இந்த ஆண்டு, கிழக்கு திமோர் ஆசியானின் புதிய குடும்ப உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தையும் பதிவு செய்தது."
"பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் பொதுவான எதிர்காலத்திற்காக ஞானத்துடனும் நேர்மையுடனும் கலந்துகொண்ட அனைத்து ஆசியான் நண்பர்களுக்கும் உலகத் தலைவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
மேலும், இந்தத் தலைமைப் பொறுப்பு பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நம்பிக்கையைப் பேணுவதற்கான முயற்சிகளில் மலேசியாவை நம்பகமான பங்காளியாக உயர்த்தியுள்ளது.
"இந்த ஆண்டு முழுவதும் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட ஆதரவு மற்றும் அன்பான உபசரிப்புக்காக அனைத்து மலேசிய மக்களுக்கும் நன்றி," என்று அவர் மேலும் கூறினார்.


