கோலாலம்பூர், டிச 30- பெரிக்காத்தான் நேஷனல் அரசியல் கூட்டணியின் தலைவர் பொறுப்பில் இருந்து டான்ஶ்ரீ முஹிடின் யாசின் விலகுவதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி 1ஆம் தேதி 2026, டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தனது பொறுப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாகவும் அன்றைய தினமே அவரின் விலகல் நடப்புக்கு வரும் என்று பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஓர் ஊடக அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
ஐந்தாண்டுகளுக்கு முன் உருவான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் தனது தலைமையின் போது தனக்கு வற்றாத ஆதரவளித்த அனைத்து உறுப்பு கட்சி தலைவர்களுக்கும் டான்ஶ்ரீ முஹிடின் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்து கொண்டார்.
பெரிக்காத்தான் நேஷனல் அரசியல் கூட்டணியின் தலைவர் பொறிப்பிலிருந்து தாம் விலகுவது குறித்து எந்தவொரு காரணத்தையும் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் முன்வைக்கவில்லை.
அவரின் பதவி விலகலைப் பெர்சத்து கட்சியின் தலைமை செயலாளர் டத்தோஶ்ரீ முஹம்மட் அஸ்மின் அலி உறுதிப்படுத்தினார்.


