ரபாட், டிச 30- 2025 ஆப்பிரிக்கா நாடுகளுக்கான காற்பந்து போட்டியில் உபசரணை அணியான மொரோக்கோ சுற்று 16க்குத் தகுதி பெற்றது.
இன்று அதிகாலையில் நடைபெற்ற ஏ குழுவின் இறுதி குழு நிலையிலான ஆட்டத்தில் அவ்வணி ஸம்பியா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
மொரோக்கோ அணியின் முன்னணி ஆட்டக்காரர் அயூப் எல் காபி புகுத்திய இரு கோல்கள் அவ்வணியின் வெற்றியை உறுதிப்படுத்தியது.
மற்றொரு ஆட்டத்தில் மாலி, கொமொரொஸ் அணியுடன் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது.
சுற்று 16இல் அல்ஜீரியா, எகிப்து, மற்றும் மொரோக்கோ ஆகிய அணிகள் தற்போது தகுதி பெற்றுள்ளன.


