கோலாலம்பூர், டிச 30- எஸ்.ஆர்.சி இண்டர்நேஷனல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக், தனது எஞ்சிய சிறை தண்டனையை வீட்டிலிருந்து கழிக்க வகை செய்யும் வீட்டுக்காவல் தொடர்பான உத்தரவுக்கு நீதித்துறை மறுசீராய்வுக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.
இருப்பினும், புத்ராஜெயா உயர்நீதிமன்றம் அவரின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த தகவலை டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் வழக்கறிஞர் ஃபர்ஹான் ஷஃபி உறுதிப்படுத்தினார். கடந்த டிசம்பர் 24ஆம் தேதி இந்த மேல்முறையீடு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
முன்னதாக கடந்த டிசம்பர் 26ஆம் தேதி 1எம்.டி.பி வழக்கில் முன்னாள் பிரதமரான டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் மீது 25 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. இதனால் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் 11.387 பில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
SRC INTERNATIONAL வழக்கின் தண்டனை காலம் முடிந்த பிறகு இந்த 15 வருட சிறை தண்டனையை டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் கழிப்பார் என்று நீதிபதி கொல்லின் லாரன்ஸ் செகுவேரா தீர்ப்பளித்தார்.


