வாஷிங்டன், டிச 29- தென்கிழக்காசியா நாடுகளான தாய்லாந்து, கம்போடியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே கொண்டுவரப்பட்ட போர்நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெரிதும் வரவேற்றுள்ளார்.
இந்த நடவடிக்கையானது இரு நாடுகளுக்கும் இடையில் ஓர் அமைதியான மற்றும் இணக்கமான சூழலை உருவாக்கும் நோக்கம் உடையதாகும் என்று டிரம்ப் விவரித்தார்.
அமைதியை நிலைநாட்டிய கம்போடியா மற்றும் தாய்லாந்து நாட்டு தலைவர்களின் செயலைத் தாம் பாராட்டுவதாக டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கமான TRUTH SOCIAL பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த ஒரு நூற்றாண்டாக கம்போடியா, தாய்லாந்து எல்லை சிக்கல் பெரும் சண்டையாக இரு நாடுகளுக்கும் அமைந்தது. 817 கிலோமீட்டர் தூரம் கொண்ட எல்லை வரையறை கொண்ட பகுதிகள் இன்னும் முழுமையான தீர்வை எட்டவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


