சியோல், டிச 29- கடந்தாண்டு கொரியாவின் ஜெஜு விமான விபத்து தொடர்பாக 179 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தைத் தொடர்ந்து தற்போது தென்கொரியா அதிபர் லீ ஜே மியுங் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு ஒன்றை கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜெஜு விமான விபத்து குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்படும் என்று அதிபர் உறுதியளித்தாக YONHAP செய்தி நிறுவனம் செய்தியை வெளியிட்டது.
கடந்தாண்டு டிசம்பர் 29ஆம் தேதி ஜெஜு விமானம் விபத்துக்குள்ளானது. கொரியா வான் போக்குவரத்து துறையில் சுயேட்சை மற்றும் அதன் பாதுகாப்பு உள்கட்டமைப்பை உறுதிப்படுத்தும் என்று லீ உறுதியளித்தார்.
விபத்தில் பலியான உறவுகளை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப கொரியா அரசு தொடர்ந்து அவர்களுக்கான உளவியல் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று சொன்னார்.


