ஜகார்த்தா, டிச 29 - நேற்றிரவு இந்தோனேசியா, சுலவேசி தீவில் உள்ள மனாடோ நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதை உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
வெர்டா டமாய் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் காவல்துறை அதிகாரி அலம்ஷா பி ஹசிபுவான் தெரிவித்தார்.
அந்த முதியோர் இல்லத்தில் வசித்தவர்கள் பெரும்பாலானோர் வயதானவர்கள் என்பதால் அவர்கள் கட்டிடத்தின் உள்ளே சிக்கிக்கொண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் மூவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மனாடோ நகர தீயணைப்பு துறையின் தலைவர் ஜிம்மி ரொட்டின்சுலு கூறினார்.
--பெர்னாமா


