கோலாலம்பூர், டிச 29- ஜனவரி 1ஆம் தேதி முதல் சரவாக் மாநிலத்தில் தொடர் கனமழை பொழியும் என்று மலேசிய வானிலை ஆய்வு துறையான மெட் மலேசியா அறிவித்துள்ளது.
இந்த தொடர் கனமழையானது ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை நீடிக்கும் என்று மெட் மலேசியாவின் தலைமை இயக்குநர் டாக்டர் முஹம்மட் ஹிஷாம் கூறினார்.
இதே காலக்கட்டத்தில் சரவாக் மாநிலத்தில் தொடர் கனமழை, சூரைக்காற்று வீசும் வேளையில் தென் சீனக்கடலில் பேரலைகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அண்மைய வானிலை நிலவரங்களைப் பற்றி தெரிந்து கொள்ள பொதுமக்கள் மெட் மலேசியாவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் அல்லது MYCUACA செயலியின் வாயிலாகவும் தெரிந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.



