ஷா ஆலம், டிச 29: அலோர் காஜா மாவட்டத்தில் உள்ள ஆயர் குரோ ஓய்வு மற்றும் சுகாதாரப் (R&R) பகுதியில் நேற்று மூன்று கார்கள் மீது டிரெய்லர் ஒன்று மோதியது தொடர்பாக சமூக ஊடகங்களில் வைரலான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் பகிர்ந்து கொண்ட வீடியோ பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் மூலம், சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெரோடுவா அல்சா உட்பட பல வாகனங்கள், டிரெய்லர் மோதி சேதமடைந்தன என தெரிய வந்தது.
இச்சம்பவத்தை அலோர் காஜா மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அஹ்மட் அபு பக்கார் உறுதிப்படுத்தினார். மேலும், இந்த வழக்கு தற்போது புக்கிட் அமான் நெடுஞ்சாலை புலனாய்வுப் பிரிவால் (USLR) விசாரிக்கப்பட்டு வருகிறது.
"ஒரு டிரெய்லர் மற்றும் மூன்று தனியார் கார்கள் சம்பந்தப்பட்டன இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நடந்து வருவதாக," அவர் கூறினார்.
இச்சம்பவம் குறித்து ஊகங்களைப் பரப்ப வேண்டாம் என்றும், விசாரணையை நடத்த அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.


