ஷா ஆலம், டிச 29 - சிலாங்கூர் இலவச நீர் திட்டத்திற்கான (SADE) விண்ணப்பங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள குடியிருப்பாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு மாதமும் 20 கன மீட்டர் (மீ³) இலவச தண்ணீரைப் பெற விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இலவச நீர் திட்டம் டிசம்பர் 29 முதல் விண்ணப்பங்களுக்காக மீண்டும் திறக்கப்படுவதாக சிலாங்கூர் மாநில அரசு செயலாளர் அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அறிவித்தது.
இத்திட்டத்திற்குப் பொதுமக்கள் https://akses.selangor.gov.my/#iltizam-pemberdayaan-rakyat-selangor என்ற அகப்பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.
சிலாங்கூர் இலவச நீர் திட்ட விண்ணப்பத் தேவைகள்:
1. குடியிருப்பில் ஒரு தனிப்பட்ட நீர் மீட்டர் இருக்க வேண்டும்.
2. விண்ணப்பதாரர் மலேசிய குடிமகனாகவும் சிலாங்கூரில் வசிக்கவும் வேண்டும்.
3. மாதாந்திர குடும்ப வருமானம் RM6,000ஐ விட குறைவாக இருக்க வேண்டும்
4.ஒவ்வொரு விண்ணப்பதாரரும் ஒரு குடியிருப்பு நீர் கணக்கிற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
முன்னதாக, சிலாங்கூர் மாநில அரசு, கடந்த செப்டம்பர் மாதம் முதல் சிலாங்கூர் இலவச நீர் திட்டத்திற்கான (SADE) மாதாந்திர வருமான வரம்பை RM5,000 லிருந்து RM6,000ஆக உயர்த்துவதாக அறிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. குடியிருப்பாளர்கள் மீதான நிதிச் சுமையைக் குறைப்பதும், தேவைப்படும் குடும்பங்களுக்கு உதவுவதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
ஆர்வமுள்ள நபர்கள் கூடுதல் விவரங்களுக்கு www.airselangor.com/services/sade அல்லது https://akses.selangor.gov.my/#iltizam-pemberdayaan-rakyat-selangor என்ற சிலாங்கூர் நீர் மேலாண்மை வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.


