மர்ராகெஷ், டிச 29- ஆப்பிரிக்கா நாடுகள் கிண்ண காற்பந்து போட்டியில் ஐவொரி கொஸ்ட், கெமரூண் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது.
நடப்பு ஆஃப்கோன் வெற்றியாளரான ஐவொரி கொஸ்ட் இந்த ஆட்டத்தில் வெற்றிப்பெறும் என்று எண்ணிய வேளையில் ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது.
அமட் டியால்லோ ஐவொரி கொஸ்ட் அணிக்காக கோல் புகுத்தினார். ஐந்து நிமிடங்கள் கழித்து கெமரூண் அணிக்கு ஐவொரி கொஸ்ட் அணியின் ஆட்டக்காரர் சொந்த கோல் புகுத்தி ஆட்டத்தை சமப்படுத்தினார்.
ஆஃப்கோன் போட்டியின் எஃப் குழுவில் இரு அணிகளும் தலா நான்கு புள்ளிகளுடன் இருக்கும் நிலையில் மொசாம்பிக் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.


