ஷா ஆலம் டிச 29 ;- விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு மாபெரும் விழா மலேசிய ரசிகர்கள் முன்னிலையில் நடத்தினார். இந்த இசை வெளியீடு, நாட்டில் பலருக்கு ஆச்சரியத்தையும் சிலருக்கு ஏமாற்றத்தையும் வழங்கியுள்ளது.

மா பெரும் ரசிகர் கூட்டம் மட்டுமல்லாமல் வசூலிலும் (malaysia Book of reccord ) மலேசிய புத்தக சாதனை பட்டியலில் இடம் பிடிக்கும் என்று சொல்லப் படுகிறது.
இதை ஏன் அரசாங்கம் தடை செய்யவில்லை என்றும் பலர் கேள்வி எழுப்புகின்றனர். எந்த சமய மற்றும் கலை கலாச்சார நிகழ்வுக்கும் அரசாங்கம் தடை விதித்ததில்லை , அதிலும் இந்திய கலாச்சார நிகழ்ச்சிகள் மலேசியாவில் எல்லா இன மக்களும் ரசிக்கின்றனர். இந்திய கலைஞர்களுக்கு சிறப்பு செய்வதும் நமக்கு புதியது அல்ல.
ஆனால் அமலாக்கத்துறை சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் அரசியல் பிரச்சாரமாகி விடக்கூடாது என்று சில கட்டுப்பாடுகளை விதித்தது. ஏற்பாட்டாளர்கள் மற்றும் மலேசிய விஜய் ரசிகர்களும் அதை முறையாக அனுசரித்தார்கள் என்றே கூற வேண்டும்.
சுமார் 75 ஆயிரம் ரசிகர்கள் திரண்ட இந்த நிகழ்வில் 99 வெள்ளி முதல் 299 வெள்ளி வரைக்குமான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்ததாக அறியப்படுகிறது.
உள்ளூர் கலைஞர்களுக்கு இந்த மாதிரியான பொருளாதார ஆதரவு மற்றும் வரவேற்பு கிடைப்பதில்லை என்ற புலம்பல் ஆதங்கம் பல உள்ளூர் பிரபலங்களுக்கு இருந்தாலும் ஒரே இரவில் இவ்வளவு பெரிய தொகையை ஈட்டிய நிறுவனம் அந்த சமுதாயத்திற்கு என்ன கொடுத்தது என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.
அதற்கு பதிலளிக்கும் வண்ணம் ஏற்பாட்டாளர் ஜோகூர் சுல்தான் அறக்கட்டளைக்கு ஒரு 1மில்லியன் ரிங்கிட் மற்றும் சுல்தானா ரோஹான அறக்கட்டளைக்கு நூறு ஆயிரம் வெள்ளிகளையும் வழங்கி உள்ளனர்.
இந்த பணி தொடர வேண்டும் குறிப்பாக மிக வறிய நிலையில் உள்ள மக்களுக்கு உதவவும், குறிப்பாக புறநகர் பகுதிகளில் மூடப்படும் அபாய நிலையில் உள்ள 37 பள்ளிகளுக்கு மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் உதவலாம், என்கிறார்கள்.
அந்த 37 தமிழ்ப்பள்ளிகளும் 10 க்கும் குறைவான மாணவர்களை கொண்டுள்ளது. அவர்களுக்கு புதிய ஜீவனம் வழங்கும் வண்ணம் இது போன்ற நிறுவனங்கள் ஈட்டும் மில்லியன் கணக்கான லாபத்திலிருந்து ஏன் உதவக்கூடாது என்று சில விஜய் ரசிகர்கள் கேட்பதிலும் எதிர்பார்ப்பிலும் நியாயம் உண்டு.
குறைந்த மாணவர்கள் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு போக்குவரத்து வாகனம் வழங்குவது அல்லது சிலாங்கூர் மாநிலத்தில் உள்ளது போன்று ஏழை தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து கட்டணத்தை வழங்கலாமே? இதை கவனிக்குமா மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்று கேட்கின்றனர்.?


