குடும்பத்தாருடன் விடுமுறையைக் கழிக்க விருப்பமான இடங்களில் சிலாங்கூரும் அடங்கும்

29 டிசம்பர் 2025, 5:37 AM
குடும்பத்தாருடன் விடுமுறையைக் கழிக்க விருப்பமான இடங்களில் சிலாங்கூரும் அடங்கும்
குடும்பத்தாருடன் விடுமுறையைக் கழிக்க விருப்பமான இடங்களில் சிலாங்கூரும் அடங்கும்

ஷா ஆலம், டிச 29: பள்ளி விடுமுறை மற்றும் ஆண்டு இறுதி பருவத்தை முன்னிட்டு குடும்பத்தாருடன் விடுமுறையைக் கழிக்க விருப்பமான இடங்களில் ஒன்றாக சிலாங்கூர் திகழ்கிறது.

இதில் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிக்கும் குடும்பங்கள் அதிக தூரம் பயணிக்காமல் அனுபவிக்கக்கூடிய பல்வேறு சுற்றுலா தளங்கள் மாநிலத்தில் உள்ளன என சுற்றுலா சிலாங்கூர் தலைமை நிர்வாக அதிகாரி சுவா யீ லிங் கூறினார்.

"சிலாங்கூர் என்பது அனைத்து வயதினருக்கும் எளிதில் அணுகக்கூடிய, முழுமையான மற்றும் பொருத்தமான ஒரு சுற்றுலாத் தலமாகும். அனைத்து வகையான சுற்றுலா தளங்களும் சிலாங்கூரில் உள்ளன.

"இந்த மாநிலம் நாட்டில் மிகப்பெரிய தீம் பார்க், வலையமைப்பைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், இயற்கை மற்றும் கிராமப்புற சுற்றுலாவையும் வழங்குகிறது.

"நீங்கள் சுற்றுச்சூழல் சுற்றுலாவை அனுபவிக்க விரும்பினால், கோல சிலாங்கூருக்கு செல்லலாம். அதே போல் கற்றல் மற்றும் பொழுதுபோக்கு கூறுகளை இணைக்கும் கல்வி சுற்றுலாவையும் சிலாங்கூரில் மேற்கொள்ளலாம்," என்று மீடியா சிலாங்கூரின் பிச்சாரா செமாசா நிகழ்ச்சியில் சுவா யீ லிங் கூறினார்.

எட்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலக்காகக் கொண்ட விசிட் சிலாங்கூர் ஆண்டு (TMS) 2025 பிரச்சாரத்தின் இறுதி வாய்ப்பு இந்த பள்ளி விடுமுறை காலம் கருதப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, சிலாங்கூர் இலக்கில் சுமார் 80 சதவீதத்தை அடைந்துள்ளது. இது 6.4 மில்லியன் பார்வையாளர்களுக்கு சமம், மீதமுள்ள 20 சதவீதத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் அடைய இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

“பள்ளி விடுமுறைகள் சுற்றுலாத் துறைக்கு மிக முக்கியமான காலமாகும். ஏனெனில், பெரும்பாலான குடும்பங்கள் விடுமுறைக்குச் செல்ல இந்த நேரத்தைத் தேர்வு செய்கின்றன. இது TMS 2025க்கான எட்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் இலக்கை அடைவதற்கான இறுதி வாய்ப்பாகும்,” என்றும் அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.